அன்புள்ள மாணவ மாணவிகளே, பெற்றோர்களே!!
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மேற்கொண்டு எந்த பாலிடெக்னிக்கில் சேர்ந்து எந்த பட்டயப்படிப்பு (Diploma) படிக்கலாம்? பனிரெண்டாம் வகுப்பு (+2) முடித்தவுடன் எந்த கல்லூரியில் சேர்ந்து எந்த பட்டப்படிப்பு (Degree) படிக்கலாம்? எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது?
இது போன்ற கேள்விகளால் குழப்பமா? சரியான வழிகாட்டுதல் பெற விருப்பமா?
வாருங்கள் மேற்படிப்பு ஆலோசனை நிகழ்ச்சிக்கு!!
போட்டிகள் நிறைந்த இன்றைய நவீன உலகத்தில், எந்த மாதிரியான படிப்புகளை படித்தால் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை எளிதில் அடையலாம் என்று நம் மாணவ மாணவிகளுக்கு வழிகாட்ட, ஒரு அருமையான கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சியை, பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, பனைக்குளம் முஸ்லிம் நிர்வாக சபை மற்றும் துபாயில் உள்ள பனைக்குளம் முஸ்லிம் பேரவை இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: மாணவிகளுக்கு தனி இட வசதி உண்டு.
| ஆலோசனை வழங்குபவர் | பேராசிரியர் டாக்டர் எஸ். ஆபுதீன், M.Sc., M.Phil., Ph.D. டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையாங்குடி |
| நாள் | 17-05-2009 ஞயிற்றுக்கிழமை |
| நேரம் | 9.30 காலை |
| இடம் | சுலைஹா கல்யாண மஹால் பஸ்ஸ்டாண்ட், பனைக்குளம் |
| மேலும் விபரங்களுக்கு | ஜனாப். அர்சத் உசேன் – +91 9442380160, இந்தியா ஜனாப். ஹம்ஸாத் அலி – +91 9443105245, இந்தியா ஜனாப். நஸீர் அலி – +971 507960633, UAE ஜனாப். முஹம்மது சஹாபுதீன் – +971 505518347, UAE |
அன்புடன் அழைக்கும்
பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை
பனைக்குளம் முஸ்லிம் நிர்வாக சபை மற்றும்
பனைக்குளம் முஸ்லிம் பேரவை, துபாய்

sliveroflight
July 28, 2010
cheapest car insurance %(