பனைக்குளத்தில் பேசப்படும் பிரத்யேக வார்த்தைகள்

நமதூரிலும் அதன் சுற்றுப்புற ஊர்களிலும் பேசப்படும் சில வார்த்தைகளை தமிழகத்தில் வேறு எங்கும் கேட்க முடிவதில்லை. இந்த வார்ததைகளில் சில  செந்தமிழாகவும், சில பிற மொழிக் கலப்பாகவும் இருக்கின்றன. வளர்ந்து வரும் நவீன ஊடகங்களின் தாக்குதல்களினால் இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் தனித்துவ பேச்சு வழக்கு தமிழ் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றது.  திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் வெகுஜன பத்திரிக்கைகளில் புழங்கப்படும் வார்த்தைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. பெரும்பாலான பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது இது போன்ற பொதுவான தமிழையே உபயோகிக்க பெரிதும் விரும்புகின்றனர். இந்த போக்கு அவர்களை நகரத்து ஆட்டோ காரர்களிடம் ஏமாறுவதிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றினாலும், காலப் போக்கில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ்ந்த மக்களின் அடையாளமாக விளங்கிய பிரத்தியேக வார்த்தைகளை காலச்சக்கரத்தின் தடங்களுக்கிடையே  புதைத்து விடுகிறது. இது கால மாற்றத்தாலும், மொழியின் பரிணாம வளர்ச்சியாலும் ஏற்படும் பொதுவான மாற்றமே என்றாலும், கேட்டு, பேசி, புழங்கிய வார்த்தைகள் கண் முன்னே வழக்கொழிந்து போவதை காணச் சகிக்க இயலாது எந்த மொழி ஆர்வலராலும்.

இந்த ரீதியில் யோசித்துக் கொண்டுருக்கும் போது, இப்படி நமதூரில் வழக்கொழிந்த, வழக்கொழிந்து கொண்டிருக்கின்ற மற்றும் நமதூரில் மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை ஒரு பட்டியல் போட்டால் என்ன என்று தோன்றியது. இப்படி செய்தால், ஒரு கலாசாரத்தைப் பதிவு செய்த மாதிரியும் இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் மொழி ஆர்வலர்களின் ஆய்வுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும். கீழ்க்கண்ட பட்டியலில் பனைக்குளத்து வார்த்தைகள், அவற்றுக்கான பொருள் மற்றும் இவைகளுக்கு நிகரான ஆங்கில வார்த்தைகளையும் கொடுத்துள்ளேன்.  தற்போது என்னுடைய ஞாபகத்தில் இருந்தவைகளை கொடுத்துள்ளேன். இந்தக் கட்டுரையை வாசிக்கும் சகோதரர்கள் தங்களுக்கு ஞாபகம் வரும் வார்த்தைகளை கீழே கருத்துப் பகுதியில் சொன்னால் அவற்றை சேர்த்துக் கொள்கிறேன்.

பங்களிப்பு  செய்தவரகள்: ஜனாப் ஆதம் முஹம்மது, ஜனாப் ஜியா

பனைக்குளம் பகுதியின் பிரத்தியேக வார்த்தைகள்

பனைக்குளத்து வார்த்தைகள்

நிகரான தமிழ் சொற்கள்

நிகரான ஆங்கில சொற்கள்

அத்தா, வாப்பா அப்பா Father
ம்மா அம்மா Mother
சாச்சா சிறிய தந்தை Paternal Uncle
மச்சி மாமாவின் மகள் Cousin
ம்மம்மா தாயாரின் தாயார் Maternal grandmother
அத்தத்தா/வாப்பப்பா தந்தையின் தந்தை Paternal grandfather
அத்தம்மா/வாப்பும்மா தந்தையின் தாயார் Paternal grandmother
பாட்டி பாட்டியின் தாயார்
அவுக/அவ்ஹ அவர்கள்
அவய்ங்க
லே வயதில் ஒத்த/வயது குறைந்த பெண்களை அழைக்க பயன்படுத்தப்படும் சொல்
வாலா “வாடா” என்பதின் பெண்பால் சொல்
போலா/இருலா/உக்காருலா/என்னலா “லா” சேர்க்கையால் பெண்பாலாகும் சொற்கள்
கொமரு/கொமரி/கொமரிப்புள்ள கன்னிப் பெண், திருமணமாகாத பருவப்பெண்
கொமரிப்புள்ளய்க இளம்பெண்கள், கன்னிப்பெண்கள்
மொட்டையன் திருமணமாகாத வாலிபன்
மொட்டயங்க வாலிபர்கள், இளைஞர்கள்
மொட்டகொட்டை நிர்வாணம்
பாங்கு/வாங்கு தொழுகைக்கு அரபி மொழியில் விடுக்கப்படும் அழைப்பு
நோம்பு நோன்பு Fasting
நடயம் செருப்பு
ஆனம் குழம்பு Curry
வெள்ளானம் காரம் இல்லா குழம்பு
மீனானம் மீன் குழம்பு
கறியானம் கறி குழம்பு
பருப்பானம் பருப்பு குழம்பு
முட்டானம் முட்டை குழம்பு
நண்டானம் நண்டு குழம்பு
ராலாணம்/விராலானம் இரால் குழம்பு
சொதியானம்/சொதி ரசம்
தால்சா ஆட்டு கொழுப்பு சேர்த்த பருப்பு குழம்பு
இடியப்பம் இடியாப்பம்
மசியல் மீதமான இடியாப்பத்தை வைத்து செய்யக்கூடிய நூடுல்ஸ்
தேங்காய் கஞ்சி தேங்காய் பாலில் செய்த அரிசி கஞ்சி
வட்லப்பம் Egg pudding
தொதல் அல்வா போன்றது
அடைப்பணியாரம்
ரால்/விரால் இரால்
கணவாய்
சூடை மீன்
நகரை மீன்
வாலை மீன்
ஊளி மீன்
ஆக்கனங்கெழுது மீன்
கும்பலா மீன்
சீலா மீன் வஞ்சிரம்
உல்லான் சிறு பறவை
ஆவுலியா மீன்
பல்லுகுத்தி மண்ணீரல்
யான்? ஏன்?
ஏனம் பாத்திரம், கலயம்
அன்னாவி தரகர், இடைத் தரகர்
வெள்ளனம் அதிகாலை
வெஞ்சனம் துவையல், சட்னி
தொட்டுக்கறி
கொண்டோடி
கயவாலி/கயவாலிப்பயல் கயவன்
கேவலப்பயல் கேவலம் அடைந்தவன்
பேயன்/பேப்பயல் மூடன், முட்டாள்
முசுரு முன்கோபம் உள்ளவன்
அப்பு இந்து பெரியவர்களை மரியாதையாக அழைக்கும் சொல்
பண்டாரி சமையற்காரர் cook
பதனி பதநீர்
ஙொங்கு ஙுங்கு
போத்தல் பாட்டில் Bottle
அலிமாஸ் அலமாரி Almirah
சம்ஸா ஆப்பை சிறு கரண்டி Chinese Spoon
பாதாளக் கரண்டி
அங்குசா வாத்து போன்றது
கெப்பனை கர்ப்பம்
கெப்பனக்காரி கர்ப்பிணிப்பெண்
ஒக்குடு பழுது பார் Repair
தேரமாச்சு நேரமாச்சு Time is up
பொக்குண்டு சீக்கிரமாக Quick
பள்ளிக்கு தேரமாச்சு, பொக்குண்டு வா பள்ளிக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டது, சீக்கிரம் வா போகலாம்.
பகுமானம், பகுசி, பெருமை தற்பெருமை, தற்புகழ்ச்சி
ப்ராக்கு வேடிக்கை
அயித்திட்டேன் மறந்துட்டேன்
அயித்துப்போச்சு மறந்து போச்சு
ஒட்டம் விளிம்பு Edge
ஒட்டத்துக்கு போகாதே திண்ணையின் விளிம்புக்கு போகாதே
சமுக்காரம் சோப்பு Soap
ஊத்தை அழுக்கு Dirt

You can add news here

Assalamu alaikum (varah),

Dear All,

Panaikulam news category has been created in this blog. Registered users can post news items. To register, please visit http://www.panaikkulam.com/wp-login.php?action=register

After registering, you will receive a password in your e-mail. Log in using that password at http://www.panaikkulam.com/wp-login.php

Go to posts –> add new –> write the post in Tamil or in English –> save or submit for review

I will see and approve the post. Then it will appear in the blog.

Note: Here you can post any news items. News items must be common to all Panaikulam people and should not be the marriage invitations or Janasah news. There are different pages dedicated for that. If you want to make any announcement seeking people’s attention and action, then you can post in the category “NOTICE BOARD”. Thanks for your understanding. Expecting more items…

Diamond Jubilee Celebration of Panaikulam Primary School

panaikulam-primary-school

MANDAPAM UNION PANCHAYAT BAHURDIN PRIMARY SCHOOL is going to celebrate its diamond jubilee year (100th year anniversary) on 25th April 2009. A magazine is being prepared on occasion of the school diamond jubilee function, hence we request you to submit articles such as Poems / Essays / facts / Jokes /advertisement /donations, etc.

Please contact the following organizers for further information.


Contact Person Contact details
Mr. Shanmugaraja
Head Master

Mobile: + 91 9442048557

School Phone No: + 91 4567269095

Janab. Haja Sir

Teacher

Mobile: + 91 9789125399

Janab. Shahul Hameed

Repoter Daily Thanthi NewsPaper

Mobile:+91 9443105150

Janab. Barriah Mohamed

Coordinator

Janab. Barriah Mohamed

Janab. Barriah Mohamed

Mobile:+ 91 9840962111

Mail id : barriah@parveentravels.com


Help Needed for Medical Treatment

protect-kidneysHelp needed for medical treatment!! மருத்துவ சிகிச்சைக்கு உதவி தேவை!!
Assalamu alaikkum (varah),
 
Janab. Kabeer S/o Janab. Abu Bakkar Naina of Panaikulam is in a medically serious condition with kidney failure. He requires kidney transplantation urgently. His family is now seeking help. Already efforts are going on to collect money from various sources. We can also help them.
This information may also be passed on to others who can also help them. Please help!!! Please see details below for sending money.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

ஜனாப். கபீர் (ஜனாப் அபுபக்கர் நெய்னா மகன்) அவர்களுக்கு உதவுங்கள்!

நமதூரைச் சேர்ந்த ஜனாப் கபீர் (ஜனாப் அபுபக்கர் நெய்னா அவர்களின் மகன்) அவர்கள் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உடனடியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அவர் குடும்பத்திலிருந்து உதவி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதங்களை பார்க்க (http://ponmaalai.blogspot.com/) என்ற தளத்திற்குச் செல்லவும். அவருக்கு உதவ நினைப்பவர்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்ட்டிற்கு நேரடியாகவே பணம் அனுப்பி உதவி செய்யலாம். இத்தகவலை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்தியும் உதவலாம்.

Details for sending money / பணம் அனுப்பத் தேவையான விபரங்கள்:

Name / பெயர்: Zaithoon Rani
Account No /அக்கவுண்ட் எண்: 3063 999 7685
Bank / வங்கி கிளை: State Bank of India (SBI), Ramanathapuram, Tamil Nadu, India.

Mobile no to contact: +91 9944526614

வஸ்ஸலாம்!
நன்றி!